
தஞ்சை மாவட்டம் பேராவூரணி வட்டம் செங்கமங்கலத்தில் அமைந்திருக்கும் தனியார் பள்ளி தான் மூவேந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் தான் இந்த பள்ளிக்கு ஆதாரமாக முன்னாள், இன்னாள் என்று இன்று வரை மாணவர்களாக இருக்கின்றனர்.
இங்கு பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் என அனைத்து வெவ்வேறு சமூகத்தைச் சார்ந்த மாணவர்களும் பயின்று வருகிறார்கள். இந்த நிலையில் அரசால் இவர்களுக்கு வழங்கக்கூடிய நலத்திட்டங்கள் என்னென்ன என்று எத்தனை மாணவர்களுக்கு தெரியும் என்று பார்க்கப் போனால் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தெரிந்த சதவீத்தை விட மிகக் குறைந்த சதவீதம் மட்டுமே என்பதே நிதர்சனமான உண்மை. இது இந்த பள்ளி மாணவர்களுடைய நிலைமை மட்டும் தானா என்று பார்க்க தமிழகத்தில் உள்ள பெயர் சொல்லும் அளவிலான பெரும்பான்மையான தனியார் பள்ளிகளில் உள்ள மாணவர்களின் நிலைமையும் இதுவாகத்தான் இருக்கிறது.
இந்தப் பள்ளியில் பயின்ற ஆதி திராவிட சமூகத்தை சேர்ந்த மாணவர் ஒருவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக உதவித்தொகை கிடைக்கவில்லை. தற்போது இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் இந்த உதவி தொகைக்கு யார் பொறுப்பு? அதனை பெற்றுக் கொடுப்பது யாருடைய கடமையாகும்?. அந்த உதவித்தொகையை அந்த மாணவரால் மீண்டும் பெற முடியுமா? முடியாதா? ஒருவேளை முடியும் என்றால் அதற்கான பின்பற்றப்படும் வழிமுறைகள் என்ன என்று விவரங்கள் மாணவர்களுக்கு எவ்வாறு தெரிய வரும்? அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டிய கடமை யாருடையது?.
தமிழ்நாடு பள்ளிக் கல்வி துறையின் கீழ் அனைத்து பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் வகுத்து முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 1 ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் பாதியில் படிப்பை நிறுத்திவிடாமல் தொடர்ந்து கல்வி பயில ஏதுவாக உதவி தொகைகள் மற்றும் ஊக்க தொகைகள் மாணவர்கள் அனைவருக்கும் அரசு கல்வி உதவித்தொகை என்று ஆண்டுதோறும் அரசு நலத்துறை மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.
சமீப ஆண்டுகளுக்கு முன்னர் வரை இந்த உதவி தொகை அனைத்தும் மாவட்ட கல்வி நிர்வாகம் மூலமாக பள்ளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு அந்தந்த மாணவர் பெயரில் காசோலையாக வழங்கப்பட்டு வந்தது. இவ்வுதவித் தொகை மற்றும் ஊக்க தொகை உரிய பயனாளர்களான மாணவர்களுக்கு குறித்த நேரத்தில் நேரடியாக வழங்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கில் நேரடிப் பயனாளர் பரிமாற்றம் (DBT) மூலம் பயனாளர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் செலுத்திடும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இது போன்ற பல்வேறு அரசு நலத்திட்டங்களை மாணவர்கள் மத்தியில் எடுத்துச் சென்று அவர்களுக்கு விழிப்புணர்வு வழங்க வேண்டிய பள்ளிகள் அதை செய்வதில்லை. ஒரு திட்டம் என்றால் அதற்கு தேவைப்படும் ஆவணங்கள் அவற்றை செயல்முறைப்படுத்த வேண்டிய நடைமுறைகள் என்று எதையும் மாணவர்களுக்கு தெளிவுபடுத்துவதில்லை காரணம் என்னவென்று பார்க்கப் போனால் தனியார் பள்ளிகள் நடத்தும் அவர்களுக்கு முக்கிய நோக்கம் கல்லா கட்டுவது மட்டுமே அவர்களுடைய கல்லா கட்டி விட்டால் போதும் எதைப் பற்றியும் கவலைப்பட தேவையில்லை என்று பல தனியார் பள்ளிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
ஏன் இந்த பள்ளிகளுக்கு இத்தனை அலட்சியம்? இதை கண்டு கொள்ளுமா மாவட்ட கல்வி நிர்வாகம்? கண்டுகொள்ளவரா மாவட்ட ஆட்சியர்…???
