தமிழகத்தில் சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.சுமார் 60 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் ரொக்கமாக பணம் செலுத்தும் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கப்பலூர் சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் ரூ.5 முதல் 15 வரை உயர்வு அமலுக்கு வந்திருக்கிறது. சுங்ககட்டண உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இணையவழி வழியாகவோ அல்லது பாஸ்டேக் மூலமாகவே கட்டணம் செலுத்தும் முறை அமலுக்கு வந்துள்ளது. எனவே கையில் ரொக்கமாக பணம் கொடுத்து சுங்கச்சாவடிகளில் செல்ல முடியாது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் வருடாந்திர கட்டண உயர்வு முடிவின்படி சுங்கக் கட்டணமானது மாற்றப்படுகிறது. அதன்படி தான்நள்ளிரவு முதல் தமிழகத்தில் 60 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வானது அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் சுங்கச்சாவடிகளில் 60 சுங்கச்சாவடிகளில் கட்டணமானது உயர்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 6 சுங்கச்சாவடிகளில் 5 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்திருக்கிறது. குறைந்தபட்சமாக ரூ 10 முதல் 25 ரூபாய் வரை கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது. குறிப்பாக கார், ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் ஒருமுறை பயணிக்க ரூ.35 ரூபாயும், இருமுறை பயணிக்க 50 முதல் 55 ரூபாயும், மாதாந்திர கட்டணம் 1,165 இல் இருந்து 1195 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இலகுரக வாகனங்கள் ஒரு முறை செல்ல 60 ரூபாயும், இருமுறை செல்ல ரூ.85 ஆகவும், மாதாந்திர கட்டணம் ரூ.1,880 இல் இருந்து ரூ.1925 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.இதேபோன்று கனகர வாகனங்களுக்கு இந்த கட்டணமானது 5 முதல் ரூ.50 வரை அதிகரித்துள்ளது. இணையவழி வழியாகவோ அல்லது பாஸ்டேக் மூலமாகவே கட்டணம் செலுத்தும் முறை அமலுக்கு வந்துள்ளது.
