சென்னை பெருநகர காவல் ஆணையராக மகாராஷ்டிரா மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட அபின் தினேஷ் மொடக் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
1997 ம் ஆண்டின் ஐபிஎஸ் பேட்ஜ் அதிகாரியான மொடக் அவர்கள் தனது 28 ஆண்டுகால காவல் பணியில் அதிரடியின் அம்சமாகவும் நேர்மையின் வடிவமாகவும் திகழ்ந்தவர். இவர் 1999- 2001 ம் ஆண்டில் பட்டுக்கோட்டை காவல்கோட்ட துணை கண்காணிப்பாளராக பணியாற்றிய போது சட்டத்தின் வழி நின்று சிறப்புடன் பணியாற்றியவர். 2004 ம் ஆண்டு ஒரத்தநாடு காவல் கோட்டம் தனியாக பிரிக்கப்படும் வரை பாப்பாநாடு சுற்றுவட்டாரப் பகுதிகள் பட்டுக்கோட்டை காவல் கோட்டத்தில் இணைந்திருந்தன. அப்போது தனது அதிரடியான நடவடிக்கைகள் மூலம் சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்தி காவல் தலைமைப் பணியை சிறப்புடன் செய்தவர் திரு.மொடக் அவர்கள்.
தற்போது தலைநகர் சென்னையில் தேர்தல் கால பணிக்காக பெருநகர ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார் அபின் தினேஷ் மொடக்.
