.. புதிய போலீஸ் கமிஷனர் உறுதி
கோவை: தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து மிகப்பெரிய நகரமான கோவையில் பாலியல் தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவி ஆசிரியர் பாலியல் தொந்தரவு காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
மாணவியை சீரழித்த காமக்கொடூர ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டான். காமக்கொடூர ஆசிரியருக்கு உறுதுணையாக இருந்த சின்மயா பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனும் கைது செய்யப்ட்டுள்ளாள் .
இதேபோல் வேறு சம்பவமும் கோவையில் நடந்தது. கோவை அரசு கலைக்கல்லூரியில் பி.பி.ஏ துறை தலைமை பேராசிரியராக பணியாற்றி வந்த ரகுநாதன் என்பவன் பல மாணவிகளிடம் பாலியல் ரீதியாக பேசி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளான். பேராசிரியர் ரகுநாதனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். நிலைமை இப்படி இருக்க கோவை மாநகர காவல் ஆணையராக பதவி வகித்து வந்த தீபக் தமோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து கோவை மாநகர காவல் ஆணையராக பிரதீப்குமார் நியமிக்கப்பட்டார். கோவை மாநகர காவல் ஆணையராக இன்று பதவியேற்றுக்கொண்ட பிரதீப்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-தமிழகத்தில் சென்னையை அடுத்து கோவை மிக முக்கிய மாநகரமாகும். எனவே இங்கு சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்க வேண்டும். நகரம் அமைதியாக இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மகளிர் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கு வித்தியாசமான முறையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
பெண்கள் குழந்தைகள் மூத்த குடிமக்களுக்கு எதிரான குற்றத்திலிருந்து அவர்களை பாதுகாக்க சரியான விசாரணை நடத்தி நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சாலை விபத்தை குறைக்க வேண்டிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். திட்டமிட்ட குற்றங்களை தடுக்கும் வகையில் எனது நேரடி கண்காணிப்பு இருக்கும்,
பெற்றோர், ஆசிரியர் ஒருங்கிணைப்பு
சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். தொடரும் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களை குறைப்பது குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்,. பெண் குழந்தைகள் பாதுகாப்பில் மாணவிகளின் பெற்றோர், ஆசிரியர் ஆகியோரை ஒன்றிணைத்து அனைவரது ஒத்துழைப்புடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பிரதீப்குமார் தெரிவித்தார்.