அன்புக்கு அடிபணிந்தவன்
ஆசைக்கு எட்டாதவன்
அம்மாவின் உயிரானவன்
அப்பாவுக்கு கட்டுபட்டவன்
கஷ்டத்தில் உழன்றவன்
கட்டுதூக்கி சுமந்தவன்
கண்ணீரில் மிதந்தவன்
களங்கம் அற்றவன்
காவல்துறைக்கு அடிபணிந்தவன்
கட்டியவளுக்கு கடமைபட்டவன்
குழந்தைகளுக்கு வழிகாட்டியவன்
குடும்பசுமைகளை தூக்கியெறிந்தவன்
பணியில் பொறுப்பானவன்
பாசத்தை வெளிகாட்டாதவன்
பதவியில் ஏற்றம்பெற்றவன்
பலருக்கும் ஏணியாயிருந்தவன்
ஊருக்கும் உறவுக்கும் பாலமானவன்
உடலிலும் உள்ளத்திலும் பலமானவன்
நெஞ்சத்தில் வஞ்கமில்லாதவன்
நேர்மைக்கு நேசமானவன்
உதவிஆய்வாளராய் இன்று உருவானவன்
உயர்த்திய காக்கியை வணங்குபவன்
காவல்குடும்பம் முதன்மையானது
கட்டியவள்குடும்பம் இரண்டாவது
கலைக்குடும்பம் மூன்றாவது
கரைசேர்ப்பதே முடிவானது
– சி.சுபாஷ் சந்திர போஸ்,
காவல் துணைக் கண்காணிப்பாளர்