காவல்துறை என்றாலே களவு துறை என்று பலரும் பேசும் நேரத்தில் தஞ்சை மாவட்டம் செங்கிபட்டியில் நடந்த சுவாரசியமான சம்பவம்.
தஞ்சை மாவட்டம் திருவையாற்றுக்கு உட்பட்ட செங்கிப்பட்டி காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வாழை வியாபாரம் செய்யும் மூதாட்டி திருமதி கோவிந்தம்மாள் ரூ.40,000 தவறவிட்டுவிட்டார். இதனை சிசிடிவி கேமராவின் உதவியால் புகார் கொடுத்த மூன்று நாட்களில் உதவி ஆய்வாளர் ஜோஸ்டின் சிசாரா அவர்கள் விசாரணை செய்து அதனை எடுத்தவரிடமிருந்து மீட்டு கோவிந்தம்மாள் அவர்களிடம் ஒப்படைத்தார். கோவிந்தம்மாள் அவர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். பொதுமக்கள் இந்த மனிதநேய செயலை வெகுவாக பாராட்டினார்கள்.