பேராவூரணியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் பேராவூரணி கிளை சார்பில் போதைப் பொருள்களுக்கு எதிராக மக்கள் திரள் பேரணி நடைபெற்றது. பேரணியை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்ட மாவட்டத் துணைத் தலைவர் அஷ்ரப் அலி தலைமையேற்று துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் ஆவணம் ரியாஸ் முன்னிலை வகித்தார். தாலுக்கா அலுவலகத்தில் துவங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக புதிய பேருந்து நிலைய வரை சென்று வேதாந்தம் திடலில் நிறைவுற்றது.
பேரணியில் சிறுவர்கள், ஆண்கள், பெண்கள் போதைப் பொருள்களுக்கு எதிராக நூற்றுக்கணக்கான விழிப்புணர்வு பதாகைகளுடன் மதுவுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியவாறு சென்றனர். போதை பொருள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.