புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி காவல் சரகத்திற்குட்பட்ட புளியஞ்சோலை கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்த இடத்தை புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.வந்திதா பாண்டே இ.கா.ப., அவர்கள் பார்வையிட்டும், கொலை செய்த குற்றவாளியை விரைந்து பிடிக்க தனிப்படை அமைத்த நிலையில், டிஎஸ்பி கலையரசன், காவல் ஆய்வாளர் ரவி, உதவி ஆய்வாளர் மாதேஸ்வரன், குற்றப்பிரிவு உதவிஆய்வாளர் மாரிமுத்து ஆகியோர் கொண்ட தனிப்படை காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு 48 மணி நேரத்திற்குள் எதிரியை கைது செய்து அவரிடமிருந்து 2 கிராம் தங்க நகையை (கருகமணி) பறிமுதல் செய்து எதிரியை சிறையில் அடைத்தனர்.