
சாதி ஒழிப்பு முன்னணி கண்டனம்!
கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக வேங்கை வயல் இறையூர் கிராம தலித் மக்களின் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த நபர் யார் என்று குற்றவாளிகளை கண்டறிய முடியாத நிலை நீடித்து வந்தது. அதற்கு குரல் பரிசோதனை, டிஎன்ஏ பரிசோதனை, நேரடி விசாரணை என்று பல வடிவங்களில் விசாரணையை தொடங்கியது காவல்துறை. விசாரணை தொடங்கிய முதலே பட்டியலின மக்களையே குற்றம் சாட்டி தான் விசாரணை தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு தகுந்தாற் போல இரண்டு செய்தியை வெளியிட்டு வேறு வழியின்றி இவர்கள்தான் குற்றவாளிகள் என்று தற்போது சிபிசிஐடி காவல்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
குற்றவாளிகள் யார் என்று தெரிந்தும் அதனை மறைத்து அப்பாவிகளையே குற்றவாளி ஆக்கியிருப்பது அப்பட்டமான மனித உரிமை மீறல். உள் நோக்கம் கொண்டவை. சிபிசிஐடி காவல்துறை வெளியிட்டுள்ள ஆதாரம் என்று இரண்டு செய்திகள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன.
ஒன்று சுதர்சன் தாய் பேசிய ஆடியோ, இரண்டு, மலம் கலந்த குடி நீர்த் தொட்டியின் மீது அமர்ந்து இரண்டு இளைஞர்கள் மலம் உள்ள கவர் அருகே பேசி சிரிக்கும் வீடியோ ஒன்றும் வெளியிட்டு அம்மக்களை அவமானப்படுத்தியுள்ளனர்.
இந்த இரண்டு செய்தியும் ஏற்கனவே வெளிவந்தவை. ஒன்று, தொட்டி மீது ஏறச் சொல்லி காவல்துறை கூறிதான் ஏறுகிறார்கள். அதிகாரிகள் புடைசூழ கீழே நின்றுள்ளனர். அப்போது நேரம் காலை 7.30 மணி. ஏறிப் பார்த்து அதனை எடுத்து வந்து கொடுத்த விவரம் அறியா இளைஞர்கள் எப்படி குற்றவாளி ஆக முடியும்?
குடிநீர்த் தொட்டியில் மலம் உள்ள விசயத்தை வெளியில் கொண்டு வந்த இளைஞர்கள் அவர்கள்தான். இன்று வரை சமரசம் செய்துகொள்ளாமல் அன்றாடம் விசாரணைக்கு சென்றுவரும் இளைஞர்களில் இவர்கள் மூவர் முக்கியமானவர்கள். நன்கு படித்த விவரம் உள்ள இளைஞர் என்பதால் குறி வைத்துள்ளனர்.
உண்மையை வெளியில கொண்டு வந்த அந்த நபர்கள் குற்றவாளிகள் என்றால் அரசும் நிர்வாகமும் யாருக்கு சேவை செய்கிறது?
இரண்டு, விசாரணையைத் தொடங்கியது முதல் பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒத்துக்க சொல்லி அடித்துள்ளனர் என்ற செய்தி ஏற்கனவே வந்த செய்தி. நீதான் செய்தாய் என்று அடித்து ஒத்துக்க சொல்றாங்க என்ற நிலை இருந்தது. அதை வைத்து அந்த ஆடியோ வில் சுதர்சன் தாய், “அடித்தாலும் ஒத்துக்க கூடாது, அவர்களுக்கு யார் என்று தெரியும் ஆனாலும் உண்மையை சொல்லவில்லை” என்று அந்த ஆடியோவில் கூறுகிறார்.
ஏழையாக இருந்தாலும் காவல்துறையின் பொய்க்கு பலியாகாமல் அறத்தின் உண்மையின் வழி நின்று கூறும் அந்த எளிய மக்களின் குரலை திரித்து வெட்டி ஒட்டி காவல்துறை தயாரித்துள்ள வீடியோவை
அவர்கள் தான் குற்றவாளிகள் என்று அனைத்து மீடியாக்களும் காட்சிப்படுத்தி வருவது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது.
தான் குடிக்கும் குடிநீரில் தாங்களே மலத்தை கலந்து தாங்களே குடித்து பின் வெளியில் சொல்வார்களா? என்ன ஒரு முட்டாள்தனமான வாதம், சோடிப்பு? இதையே தான் தருமபுரி கிராமங்கள் கொளுத்தப்பட்ட போதும் அவர்களே கொளுத்திக் கொண்டனர் என்ற உண்மையற்ற செய்தியை சாதியவாதிகள் பரப்பினர்
அதே வன் செயலை இன்று அரசு நிர்வாகமே செய்யத் துணிந்துள்ளது.
வேங்கை வயல் சிக்கல் இந்த சமூகத்தின் சிக்கல் இல்லையா? சிவில் சமூகத்தின் பொறுப்புக் கூறல் இல்லையா? காவல்துறையின் பொய் வழக்குகள் குறித்து அறியாதவர்களா என்ன?
தமிழக காவல்துறையும் அரசும் ஏற்றுக் கொள்ள முடியாத அநீதியை தலித் மக்களுக்கு பரிசளித்துள்ளது. அரசியல் நிர்பந்தம் காரணமாக இந்த வழக்கை முடிக்க வேண்டுமே என்ற காரணத்திற்காக எல்லோரும் நம்பும் படி பொது சமூகத்தில் ஒரு குழப்பத்தை உண்டாக்கியுள்ளது காவல்துறை. ஏற்றுக் கொள்ள முடியாத அநீதி. நிச்சயம் உண்மை ஒருபோதும் மறையாது.
சமூக முரண்பாட்டை சரி செய்ய வேண்டிய அரசு நிர்வாகமும் சாதியாகவே இயங்குகிறது என்பதற்கு வேங்கை வயல் ஒரு சாட்சி.
இதற்கு பொறுப்புக் கூற வேண்டிய முதல்வர் ஸ்டாலின் அவர்களே அரசு அதிகாரிகள் சொல்லும் செய்தியை உண்மை என்று நம்பி பேசுவது ஓட்டு போட்ட மக்களுக்கு செய்யும் துரோகம். ஒரு அரச நிறுவனமே வன்கொடுமையை நீர்த்துப் போக செய்யும் பயங்கரவாத செயலை செய்துள்ளது.
தலித் மக்களின் மீது வன்முறை நிகழும் போதெல்லாம் உண்மையை திசை திருப்ப குற்றவாளிகளை பாதுகாக்கும் வகையில் பட்டியலின மக்களையே குற்றவாளியாக்குவது இன்று நேற்றல்ல காலமாக காலமாய் நடந்து வரும் ஒன்று.
தலித் மக்களே வீடுகளை கொளுத்திக் கொண்டனர், அவர்களே மலத்தை கலந்து உள்ளனர். அவர்களே திருடினர், அவர்களே தவறு செய்துள்ளனர் என்ற தலித் விரோத குற்றச்சாட்டு தொடர்ந்து விதைக்கப்பட்டு வருவதும் இன்று வேங்கை வயல் குற்ற சம்பவத்திலும் முத்திரை குத்தப்பட்டு இருப்பதும் நிரபராதிகள் தூக்கில் ஏற்றுவதற்கு சமமான ஜனநாயகமற்ற சமூக அநீதியானது. திமுக அரசு செய்யும் சமூக நீதி இதுதானா?
தமிழக அரசே! வேங்கை வயல் தலித் மக்களின் குடிநீர்த் தொட்டிக்குள் மலம் கலந்த உண்மைக் குற்றவாளிகளை கண்டறிய ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து மீண்டும் மறு விசாரணை செய்திடுக!
பாதிக்கப்பட்ட மக்களையே எந்தவித ஆதாரமும் இன்றி குற்றச்சாட்டு சுமத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ள சிபிசிஐடி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திடுக!!
வேங்கை வயல் சிக்கலை சட்டம் ஒழுங்கு சிக்கலாக மாற்றி பாதிக்கபட்டவர்களுக்கு ஆதரவை தடுக்கும் வகையில் இறையூர் கிராமத்தை முற்றுகையிட்டு அச்சுறுத்தியும், எந்த நபர்களும் உள்ளே செல்ல முடியாமல் தடுத்துவரும் காவல்துறையினர் உடனடியாக வெளியேற வேண்டும்.
குற்றவாளிகள் யார் என்று கண்டறியாமலேயே குற்றவாளிகள் இவர்கள் தான் என்று 3 இளைஞர்களை காட்சிப்படுத்திய குற்றத்திற்கு தக்க இழப்பீட்டு வழங்கிட வேண்டும்.
வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைக் கறாராக அமலாக்கிட வேண்டும்.
சாதி ஒழிப்பு முன்ன
