

சென்னை, புனித தோமையர் மலை, 2வது தெரு. புரம் காலனியில், சிராஜ் தாமஸ் செரியன், (27) த/பெ.சுனோஜ் தாமஸ் செரியன் என்பவர் தனது தாயுடன் வசித்து வருகிறார். சிராஜ் தாமஸ் செரியன் கடந்த 10.01.2025 அன்று வேலை நிமித்தமாக ஹைதராபாத் சென்றபோது, அவரது தாயும் கேரளாவில் வசித்து வரும் மகள் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் சிராஜ் தாமஸ் செரியன் கடந்த 28.01.2025 அன்று வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது, மேற்படி வீட்டின் பூட்டை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் உள்ளே நுழைந்து வீட்டிலுள்ள பொருட்களை களைந்து பார்த்ததில், தங்க நகைகள் மற்றும் பணம் கிடைக்காததால், எதிரிகள் தப்பிச் சென்றுள்ளது தெரியவந்தது. இது குறித்து சிராஜ் தாமஸ் செரியன் S-1 புனித தோமையர் மலை காவல் நிலைய குற்றப்பிரிவில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
S-1 புனித தோமையர் மலை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை செய்து, மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட 1.சந்தோஷ். வ/25, த/பெ.சங்கர். பெசன்ட்நகர், சென்னை 2.மோசஸ், வ/24. த/பெ.ரவிக்குமார். நொச்சிகுப்பம், சென்னை ஆகிய இருவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட எதிரிகள் இருவரும் விசாரணைக்குப் பின்னர் (01.02.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
